ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணி அளவில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும்.
இவ்விரு அணிகளுக்கு இடையில் 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அந்த போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது, இங்கிலாந்து.
இந்நிலையில் இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
டென்னிஸ்
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் நடத்தப்படும் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி துவங்குகிறது.
8 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி, பிப்ரவரி 11-ஆம் தேதி நிறைவுறும்.
சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.
ஏடிபி சேலஞ்சர் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவது இது 6-வது முறையாகும்.
இந்த தொடரில் 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
பேட்மிண்டன்
தாய்லாந்து பேட்மிண்டன் தொடர்: கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய அஷ்மிதா சாலிஹா
தாய்லாந்தின் பாங்காக் நகரில் தற்போது நடைபெற்று வரும் தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா வீராங்கனை அஷ்மிதா சாலிஹா, கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த், இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத்துடன் மோதினார்.
இதில் மிதுன் வெற்றி பெற்று கால் இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.
கால் இறுதி சுற்றில் மஞ்சுநாத், நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவுடன் மோதுகிறார்.
கிரிக்கெட்
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா?
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) போட்டியில் இன்று இந்தியாவும், நேபாள கிரிக்கெட் அணியும் போட்டியிடுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணியே அரையிறுதிக்கு தகுதி பெறும்.
தென்ஆப்பிரிக்காவில் நடந்து வரும் இந்த தொடரில், 16 அணிகள் பங்கேற்றுள்ளது.
லீக் சுற்று முடிவில் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்திய அணி, தனது 2-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இன்று மதியம் நேபாளத்தை எதிர்கொள்ளும்.
தனது பிரிவின் புள்ளி பட்டியலில் அதிக வெற்றிகளை பெற்று, இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.