Page Loader
போராட்டம் எதிரொலி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் ரத்து

போராட்டம் எதிரொலி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் ரத்து

எழுதியவர் Sekar Chinnappan
Apr 24, 2023
07:35 pm

செய்தி முன்னோட்டம்

திங்களன்று (ஏப்ரல் 24) மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மே 7 ஆம் தேதி நடத்தப்படும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை என்று அறிவித்தது. இது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் "கமிட்டி உருவாக்கப்பட்ட 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல்களை நடத்த இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் இடைநிலை அல்லது தற்காலிக குழு அமைக்கப்பட வேண்டும்." என்று கோரியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரியில் கூறியபடி, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மீண்டும் தற்போது போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தேர்தல் ரத்து