
T20 உலகக் கோப்பை: முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா
செய்தி முன்னோட்டம்
ஜூன் 27, அன்று டிரினிடாட்டில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் தென்னாப்பிரிக்கா தனது முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சாதனை படைத்துள்ளது.
இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியும் தென்னாபிரிக்கா என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அவர்கள் அரையிறுதிலிருந்து வெளியேறினர்.
ஜூன் 29, சனிக்கிழமை அன்று பார்படாஸில் நடந்த இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இன்று இந்தியா அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்தியா நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு துவங்கும்.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், இறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்கொள்ளவிருப்பது இந்தியா!
ட்விட்டர் அஞ்சல்
இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா
#SportsUpdate | டி20 உலக கோப்பை தொடரில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா.#SunNews | #T20WorldCup2024 | #SouthAfrica pic.twitter.com/P4KWunvBnI
— Sun News (@sunnewstamil) June 27, 2024