Loading...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 130 ஆண்டுகால உலக சாதனையைத் தகர்த்த தென்னாப்பிரிக்க வீரர் சைமன் ஹார்மர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 130 ஆண்டுகால உலக சாதனையைத் தகர்த்தார் தென்னாப்பிரிக்க வீரர் சைமன் ஹார்மர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 130 ஆண்டுகால உலக சாதனையைத் தகர்த்த தென்னாப்பிரிக்க வீரர் சைமன் ஹார்மர்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 19, 2026
05:36 pm

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வியாழக்கிழமை (நவம்பர் 19) நிறைவடைந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் அபாரமாக பந்துவீசினார். கடந்த ஆண்டு தேசிய அணிக்கு மீண்டும் திரும்பியதிலிருந்து ஹார்மர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 130 ஆண்டுகால உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார். இவரது மாயாஜால பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

வங்கதேச பேட்டிங் வரிசையை சரித்து 9 விக்கெட் வெற்றியைத் தேடித்தந்த ஹார்மர்

போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி கடும் சவால் அளிக்க முயன்றது.

ஆனால் 37 வயதான சைமன் ஹார்மர் 12.3 ஓவர்கள் வீசி 51 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

நஜ்முல் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களை அவர் வெளியேற்றினார்.

இதனால் வங்கதேச கிரிக்கெட் அணி 168 ரன்களுக்குள் சுருண்டது.

தொடர்ந்து 12 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி வாகை சூடியது.

1896 சாதனை தகர்ப்பு

1896-ல் பாபி பீல் படைத்த டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி சாதனை தகர்ப்பு

இந்த இன்னிங்ஸின் போது டெஸ்ட் போட்டிகளின் இரண்டாவது இன்னிங்ஸில் ஹார்மர் தனது 50-வது விக்கெட்டைக் கடந்தார்.

இதுவரை 14 போட்டிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸ்களில் சேர்த்து 53 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

இதில் அவரது பந்துவீச்சு சராசரி 14.09 ஆகப் பதிவாகி புதிய உலக சாதனையாக மாறியுள்ளது.

இதன் மூலம் 1896-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பாபி பீல் படைத்த 14.25 என்ற 130 ஆண்டுகால சாதனையை ஹார்மர் முறியடித்துள்ளார்.

குறைந்தபட்சம் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் இதுவே உலகின் மிகச் சிறந்த சராசரியாகும்.

ADVERTISEMENT

சாதனை பட்டியல்

ரங்கனா ஹெராத் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை பட்டியலில் இணைந்தார்

சைமன் ஹார்மர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் நான்காவது முறையாக ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.

குறிப்பாக 36 வயதிற்குப் பிறகு நான்கு முறை ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் ரங்கனா ஹெராத்திற்கு பிறகு இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் இவரே ஆவார்.

மேலும் வங்கதேசத்திற்கு எதிராக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வயதான வீரராகவும் ஹார்மர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு ஹெராத் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT