Page Loader
ஒரே ஒரு ட்வீட்டால் ரசிகர்களின் கோபத்தைக் கிளறிய ஷுப்மன் கில்
ஒரே ஒரு ட்வீட்டால் ரசிகர்களின் கோபத்தைக் கிளறிய ஷுப்மன் கில்

ஒரே ஒரு ட்வீட்டால் ரசிகர்களின் கோபத்தைக் கிளறிய ஷுப்மன் கில்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 12, 2023
11:45 am

செய்தி முன்னோட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 444 ரன்களை சேஸ் செய்ய முடியாமல், போட்டியின் ஐந்தாம் நாளில் (ஜூன் 11) இந்திய கிரிக்கெட் அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா நான்கு ஐசிசி பட்டங்களையும் வென்ற முதல் அணி என்ற சாதனை படைத்துள்ளது. 2013க்கு பிறகு ஐசிசி டிராபியை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இந்தியா இழந்துள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்ததும், இந்திய தொடக்க வீரர் ஷுப்மன் கில் ட்விட்டரில் இந்திய அணியின் படத்தை வெளியிட்டு, "இன்னும் முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இந்திய ரசிகர்கள் இந்திய அணி தோற்ற விரக்தியில் கில்லின் ட்வீட்டிற்கு அவரை வசைபாடி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post