Page Loader
முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால பயணம்; கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவிப்பு
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவிப்பு

முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால பயணம்; கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2024
08:22 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 13 ஆண்டுகால அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. ஷிகர் தவான் தனது தைரியமான ஆட்டம் மற்றும் அமைதியான நடத்தைக்காக புகழ்பெற்றவர், குறிப்பாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். 2010ல் தொடங்கிய இவரது சர்வதேச கிரிக்கெட் பயணம், சில மாதங்களிலேயே இந்திய அணியில் அவருக்கு முக்கிய இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. குறிப்பாக ஐசிசி தொடர்கள் போன்ற முக்கிய தருணங்களில் அவர் வெளிப்படுத்திய ஆட்டத்தால் "ஐசிசி தவான்" என்ற பெயரைப் பெற்றார்.

புள்ளிவிபரம்

ஷிகர் தவான் புள்ளிவிபரம்

2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் தொடரின் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனை படைத்து இரண்டு முறையும் கோல்டன் பேட்டை பெற்றார். மேலும், 2015 உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள், ஐசிசி போட்டிகளில் அதிவேகமாக 1,000 ரன்களைக் குவித்தவர் என்ற சாதனையையும் கொண்டுள்ளார். ஒட்டுமொத்தமாக 167 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 6,793 ரன்கள் குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 போட்டிகளில் விளையாடி 2,315 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 1,759 ரன்களும் எடுத்துள்ளார். நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த ஷிகர் தவான், தற்போது ஓய்வை அறிவித்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஷிகர் தவான் ஓய்வு அறிவிப்பு