
ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுகள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
வங்கதேச நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷாஹிப் அல் ஹசன் மற்றும் ருவாண்டா வீராங்கனை ஹென்றிட் இஷிம்வே ஆகியோர் மார்ச் மாதத்திற்கான ஐசிசி ஆடவர் மற்றும் மகளிருக்கான சிறந்த மாதாந்திர வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை வென்றனர்.
வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்பை ஐசிசி புதன்கிழமை (ஏப்ரல் 12) வெளியிட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வங்கதேசம் 3-0 என கைப்பற்றியதில் அவரது முக்கிய பங்கிற்காக இந்த விருது இரண்டாவது முறையாக வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜூலை 2021 இல் ஐசிசியின் சிறந்த மாதாந்திர வீரர் விருதை ஷாஹிப் அல் ஹசன் பெற்றிருந்தார்.
ICC Best Player of Month
சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற ஹென்றிட் இஷிம்வே
தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐசிசி யு-19 உலகக் கோப்பையில் ருவாண்டா அணியில் இடம்பிடித்த 19 வயதான இஷிம்வே, ஜிம்பாப்வேக்கு எதிரான தனது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அதில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் கடந்த மாதம் நைஜீரியாவில் நடந்த சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 92 ரன்கள் எடுத்தார் மற்றும் ஹாட்ரிக் உட்பட ஒன்பது விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதன் மூலம் விருதை கைப்பற்றிய இஷிம்வே, அசோசியேட் உறுப்பினரில் இருந்து ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றார்.