Page Loader
ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது வீரர் : ஷகிப் அல் ஹசன் சாதனை
ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்

ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது வீரர் : ஷகிப் அல் ஹசன் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 18, 2023
06:12 pm

செய்தி முன்னோட்டம்

வங்கதேசத்தின் சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் சனிக்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்களை கடந்தார். மேலும் இந்த போட்டியில் 83 பந்துகளில் 93 ரன்களை குவித்து தனது 53வது ஒருநாள் அரைசதத்தையும் அடித்தார். தனது 228வது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷகிப் 38.00 சராசரியில் 7,069 ரன்களை எடுத்துள்ளார். 36 வயதான அவர் 53 அரைசதங்கள் மற்றும் ஒன்பது சதங்கள் அடித்துள்ளார். தமிம் இக்பாலுக்கு (8,146) பின்னால் 7,000 ரன்களை கடந்த இரண்டாவது வங்கதேச கிரிக்கெட் வீரர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஷகிப் அல் ஹாசன்

ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் ஒருநாள் கிரிக்கெட் புள்ளிவிபரம்

ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்களுக்கு மேல் எடுத்ததோடு, 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷகிப் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக ஷாகித் அப்ரிடி (8,064 ரன்கள் மற்றும் 395 விக்கெட்கள்) மற்றும் சனத் ஜெயசூர்யா (13,430 ரன்கள் மற்றும் 323 விக்கெட்கள்) மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 3,000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆல்ரவுண்டர் என்ற பெருமையையும் ஷகிப் பெற்றுள்ளார். மேலும் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 36.07 சராசரியில் 3,283 ரன்கள் எடுத்துள்ளார்.