
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக முகமது ரிஸ்வானுக்குப் பதிலாக ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அஃப்ரிடியை, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான (ODI) புதிய கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான முகமது ரிஸ்வானுக்குப் பதிலாக ஷாஹீன் அஃப்ரிடி இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். தேர்வுக்குழு மற்றும் வெள்ளைப்பந்து தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் ஆகியோரின் சந்திப்பிற்குப் பிறகு, திங்கட்கிழமை (அக்டோபர் 21) அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முகமது ரிஸ்வானைத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவு கடந்த வாரமே எதிர்பார்க்கப்பட்டது. முகமது ரிஸ்வானின் தலைமையில் பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய ஒன்பது ஒருநாள் போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது.
தொடர் சரிவு
சாம்பியன்ஸ் டிராபிக்கு தொடர் சரிவு
சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றி கூடப் பெறாத மோசமான நிலையைத் தொடர்ந்து இந்த மாற்றம் வந்துள்ளது. முகமது ரிஸ்வான் கேப்டன்சியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மூன்று வெளிநாட்டுத் தொடர்களை வென்று சிறப்பாகச் செயல்பட்டார். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ஏற்பட்ட தொடர் சரிவு, தேர்வாளர்கள் மற்றும் புதிய வெள்ளைப்பந்துப் பயிற்சியாளர் ஹெஸ்ஸன் ஆகியோர் மாற்றத்தைக் கொண்டு வர வழிவகுத்தது. முகமது ரிஸ்வான் தலைமையில் ஆடிய 20 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் ஒன்பது வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.