மகளிர் டி20 உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் புது சாதனை
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார். 2023 உலகக்கோப்பை சீசனின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் தென்னப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் இஸ்மாயில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஷப்னிம் ஒட்டுமொத்தமாக மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஷப்னிம் இஸ்மாயில் முழுமையான புள்ளி விபரங்கள்
ஷப்னிம் இஸ்மாயில் ஆகஸ்ட் 2007 இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக மகளிர் டி20 உலகக்கோப்பையில் அறிமுகமானார். 15 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் தென்னாப்பிரிக்காவுக்காக 113 டி20 போட்டிகளில் 18.62 சராசரியில் 123 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய நான்காவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். நிடா தார், அனிசா முகமது மற்றும் ஷட் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்களில் மட்டும் தற்போதுவரை 32 போட்டிகளில் விளையாடியுள்ள ஷப்னிம் 15.25 சராசரியில் 43 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோலை (41) பின்னுக்குத் தள்ளியுள்ளார்.