சேவாக்கின் மனிதநேயம் : ரயில் விபத்தில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவதாக அறிவிப்பு!
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஒடிசாவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நடந்த பயங்கரமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார். இந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,175 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், குருகிராமில் உள்ள சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். சேவாக் இது குறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்ய முடியும். சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.