
வினோத் காம்ப்ளியா இது? நடக்கக் கூட முடியாமல்... சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் குழந்தைப் பருவ நண்பராக அறியப்படும் காம்ப்ளி தனது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க வகையில் போராடி வருவதாகத் தெரிகிறது.
வினோத் காம்ப்ளியின் உடல்நலக் குறைவு குறித்த செய்திகள் புதிதல்ல. அவர் 2013இல் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது அவரால் நடக்க முடியாத அளவிற்கு உடல்நிலை மோசமாக உள்ளதாக சித்தரிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப பிரார்த்திப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Vinod Kambli’s bad condition. pic.twitter.com/2NHb5H55jT
— niyazi fazal (@fazal_niyazi) August 5, 2024