Loading...
நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி: ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை; இந்திய உத்தேச லெவன் விவரம்
நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ருதுராஜுக்கு வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது.

நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி: ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை; இந்திய உத்தேச லெவன் விவரம்

எழுதியவர் Vasuki
Nov 02, 2026
06:47 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகிறது. வரும் நவம்பர் 4-ஆம் தேதி ஆக்லாந்தில் தொடங்கும் முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச லெவன் குறித்த கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், நட்சத்திர பேட்டர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இத்தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச களத்திற்குத் திரும்புகின்றனர்.

தொடக்க ஜோடி

மிடில் ஆர்டரில் மாற்றம்

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

நவம்பர் 19-ல் தொடங்கும் டெஸ்ட் தொடருக்கான தயார்படுத்துதலுக்காக, கேப்டன் ஷுப்மன் கில் உள்ளிட்ட முன்னணி டெஸ்ட் வீரர்கள் 3-வது போட்டிக்குப் பிறகு விடைபெறவுள்ளனர்.

அதன்பின்னர் எஞ்சிய 2 போட்டிகளுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக அணியை வழிநடத்துவார். விராட் கோலி 3-வது வரிசையிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 4-வது வரிசையிலும் விளையாடுவர்.

இதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிடில் ஆர்டரில் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் முதல் 3 போட்டிகளுக்கான ஆடும் லெவனில் இடத்தை இழக்க நேரிடும். இருப்பினும், சீனியர் வீரர்கள் விலகிய பின் கடைசி இரண்டு போட்டிகளில் ருதுராஜுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

விக்கெட் கீப்பிங்

ஆல்ரவுண்டர்கள் பங்களிப்பு

2023 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மை விக்கெட் கீப்பராகச் செயல்பட்டு வரும் கே.எல். ராகுல், இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

அவருடன் அதிரடி ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனும் பிளேயிங் லெவனில் பேட்டராகக் களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் டெஸ்ட் முகாமுக்குத் திரும்பிய பின்னர் இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்பார். ஆல்ரவுண்டர் வரிசையில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் நமன் திர் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது.

அக்சர் படேலுக்குப் பதிலாக அதிரடி ஆல்ரவுண்டர் நமன் திர்க்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இளம் வேகப்பந்து வீச்சு

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய உத்தேச லெவன்

நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வருவதால், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார்.

இதனால் வேகப்பந்து வீச்சுத் துறையை அர்ஷ்தீப் சிங் முன்னின்று வழிநடத்தவுள்ளார். அவருடன் இளம் பந்துவீச்சாளர்களான ஆகிப் நபி மற்றும் குர்னூர் ப்ரார் ஆகியோர் வேகப்பந்து கூட்டணியில் இணையவுள்ளனர்.

ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், நிதீஷ் குமார் ரெட்டி, நமன் திர், ஆகிப் நபி, அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ரார்.

ADVERTISEMENT