RR vs PBKS: வைரல் மொமெண்ட் மைதானத்தில் இல்லை, ட்ரெஸ்ஸிங் ரூமில்; சர்ச்சையில் ரியான் பராக்?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ்(RR) அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரியான் பராக், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது டிரெஸ்ஸிங் ரூமில் 'Vape'(மின்னணு சிகரெட்) பயன்படுத்தியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், ராஜஸ்தான் அணி 223 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருந்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸின் 16-வது ஓவரின் போது, நேரடி ஒளிபரப்பில் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்த ரியான் பராக், தனது கையில் இருந்த ஒரு கருவியை பயன்படுத்தி புகை விடுவது போன்ற காட்சிகள் பதிவாகின. இந்தத் தருணத்தை ரெக்கார்ட் செய்த ரசிகர்கள்,"ஐபிஎல் கேப்டன் ஒருவரே டிரெஸ்ஸிங் ரூமில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தலாமா?" என்ற கேள்வியுடன் அதனை வைரலாக்கினர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Mann did anyone of you noticed this? Parag was caught vaping during the match between RR and PBKS pic.twitter.com/MXuEipsD0O
— U' (@toxifyxe) April 28, 2026
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Captain of Rajasthan Royals Riyan Parag was caught Vaping with an electronic Vape device on Live Camera.
— Roshan Rai (@RoshanKrRaii) April 28, 2026
Vaping is illegal in India via The Prohibition of Electronic Cigarettes Act (PECA) 2019 and can lead to imprisonment for up to 3 years and fines up to ₹5 lakh@BCCI , what… pic.twitter.com/lZj3doxwwQ
ஐபிஎல் விதி
சட்டச் சிக்கல்களும் ஐபிஎல் விதிகளும்
ரியான் பராக் மீதான இந்தச் சர்ச்சை இரண்டு முக்கிய காரணங்களால் தீவிரமடைந்துள்ளது: 1. ஐபிஎல் ஒழுக்க விதிகள்: ஐபிஎல் விதிகளின்படி, மைதான வளாகம் மற்றும் டிரெஸ்ஸிங் ரூம்களில் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இதே சீசனில், ராஜஸ்தான் அணி மேலாளர் ரோமி பிந்தர் டக்அவுட்டில் செல்போன் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2. இந்தியச் சட்டம்: இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு முதல் மின்னணு சிகரெட்டுகள் (E-cigarettes/Vapes) உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இது வெறும் விளையாட்டு விதிமீறல் மட்டுமல்லாமல், சட்ட ரீதியான சிக்கலாகவும் மாற வாய்ப்புள்ளது.
நிலை
பராக் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் நிலை
இந்த விவாதங்களுக்கு மத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது. இருப்பினும், கேப்டனாக ரியான் பராக்கின் செயல்பாடு இந்த சீசனில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சராசரியாக 14.63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த வீடியோ குறித்து ஐபிஎல் நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஒருவேளை இது விதிமீறல் என உறுதி செய்யப்பட்டால், ரியான் பராக் அபராதம் அல்லது சில போட்டிகளில் விளையாடத் தடை போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும்.