Page Loader
4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்பதில் உறுதி: இந்தியா T20 அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா
15 பேர் கொண்ட அணியில் நான்கு பேர் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்பதில் உறுதி: இந்தியா T20 அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

எழுதியவர் Venkatalakshmi V
May 03, 2024
08:12 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோஹித் ஷர்மா தலைமையிலான டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட அணியில் நான்கு பேர் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், நேற்று பிசிசிஐ சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ரோஹித் ஷர்மா நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர்,"அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதில் இருவர் பேட் செய்யும் திறன் கொண்ட ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் அக்சர் படேல் உள்ளனர். சஹல் மற்றும் குல்தீப் என இரண்டு அட்டாக்கிங் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எதிரணியை பொறுத்து சுழற்பந்து வீச்சாளர்களை முடிவு செய்வோம்" என்றார்.

embed

4 சுழற்பந்து வீச்சாளர்கள்

Ajit Agarkar was asked about the 'off spinner' in #T20WorldCup24 squad & the Captain Rohit Sharma raised his hand humoursly indicating he will be the off spinner 😹,oh #RohitSharma never ever change :) pic.twitter.com/TjQFrZU3k5— Ishaan 🔴 (@Ishaan_04) May 2, 2024