
8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார் ரோஹன் போபண்ணா
செய்தி முன்னோட்டம்
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி 2023 ஷாங்காய் மாஸ்டர்ஸில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா ஜோடியான மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி முதல் செட்டை 7-5 என கைப்பற்றியது.
எனினும், அடுத்தடுத்த செட்களை 2-6, 7-10 என்ற செட் கணக்கில் இழந்து தோல்வியைத் தழுவியது.
இது இந்த ஆண்டு போபண்ணாவின் மூன்றாவது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இருவரும் இந்த சீசனின் ஏடிபி பைனலில் விளையாட உள்ளார்கள்.
Rohan Bopanna qualifes ATP Final after 2015 for 1st time
2015க்கு பிறகு முதல் முறையாக ஏடிபி இறுதிப்போட்டியில் போபண்ணா
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஆண்டு போபண்ணாவின் மூன்றாவது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டி இதுவாகும்.
முன்னதாக, இந்தியன் வெல்ஸ் மைதானத்தில் இந்திய-ஆஸ்திரேலிய ஜோடி மகுடம் வென்றது. இந்த வெற்றியின் மூலம், 43 வயதான போபண்ணா டென்னிஸ் வரலாற்றில் மிகவும் வயதான ஏடிபி மாஸ்டர்ஸ் சாம்பியன் ஆனார்.
இதையடுத்து ஏடிபி மாட்ரிட் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டிக்கு போபண்ணா-எட்பென் ஜோடி முன்னேறியது.
இந்நிலையில், ஷாங்காய் மாஸ்டர்ஸில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், போபண்ணா-எப்டன் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ஏடிபி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதன் மூலம், ஏடிபி பைனல்ஸில் போபண்ணா நான்காவது முறையாக பங்கேற்க உள்ளார் மற்றும் 2015க்குப் பிறகு முதல்முறையாக விளையாடுகிறார்.