சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இரண்டாவது இந்தியர்; சர்வதேச மறுபிரவேச விருதுக்கு ரிஷப் பண்ட் பெயர் பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆண்டின் மறுபிரவேசம் பிரிவில் 2025 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க லாரஸ் உலக விளையாட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சச்சின் டெண்டுகருக்கு பிறகு இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றுள்ளார்.
டிசம்பர் 2022 இல் கிட்டத்தட்ட ஒரு அபாயகரமான கார் விபத்தில் இருந்து தப்பிய பிறகு தொழில்முறை கிரிக்கெட்டுக்கு அவர் குறிப்பிடத்தக்க வகையில் திரும்பியதைத் தொடர்ந்து இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
வெற்றியாளர்களை விருது வழங்கும் விழா ஏப்ரல் 21இல் மாட்ரிட்டில் நடைபெற உள்ளது.
டிசம்பர் 30, 2022 அன்று ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானார். டேராடூனில் ஆரம்ப சிகிச்சை பெற்ற பிறகு, அவர் மும்பைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
தேசிய கிரிக்கெட் அகாடமி
தேசிய கிரிக்கெட் அகாடெமியில் கிரிக்கெட் மறுவாழ்வு
மும்பையில் அவர் தனது வலது முழங்காலில் மூன்று தசைநார்கள் புனரமைக்க பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.
பின்னர் அவரது மறுவாழ்வு சிகிச்சை பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்தது. அங்கு அவர் முழு உடற்தகுதியை மீண்டும் பெற உறுதியான முயற்சியை மேற்கொண்டார்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஐபிஎல்லில் தனது மறுபிரவேசத்தை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து விபத்துக்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்ததால், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் திரும்பியது இன்னும் கவனம் ஈர்த்தது.
இந்தியாவின் 280 ரன்கள் வித்தியாச வெற்றியில் அவரது அற்புதமான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
லாரியஸ் உலக விளையாட்டு விருதுக்கு ரிஷப் பண்ட் பரிந்துரைக்கப்பட்டது அவரது மீள்தன்மை மற்றும் உறுதியை எடுத்துக்காட்டுகிறது.