87 ஆண்டுகளில் முதல்முறை; பாக்சிங் டே டெஸ்டிற்கு 3,50,700 பார்வையாளர்கள் வருகை புரிந்து சாதனை
செய்தி முன்னோட்டம்
பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 இன் நான்காவது போட்டியில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் கலந்து கொண்டனர்.
இது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நீண்டகால வருகை சாதனையை முறியடித்தது. 5 ஆம் நாள், டிசம்பர் 30 அன்று, 3,50,700 ரசிகர்கள் போட்டியை பார்க்க நேரில் கலந்து கொண்டனர்.
இது 87 ஆண்டுகளுக்கு முன்பு, 1937 இல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பாக்சிங் டே டெஸ்டின் போது அமைக்கப்பட்ட 3,50,534 என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.
கடைசி நாளில் மட்டும் 51,371 ரசிகர்கள் ஸ்டாண்டுக்கு வந்ததாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியது. இரண்டாவது அமர்வின் போது வருகை உச்சத்தை எட்டியது.
தினசரி வருகை
தினசரி பார்வையாளர்கள் நிலவரம்
முதல் மூன்று நாட்களில் முறையே 87,242, 85,147, மற்றும் 83,073 ரசிகர்கள் கலந்து கொண்டனர். 4 ஆம் நாள் ஒப்பீட்டளவில் குறைவாக 43,867 வருகையைக் கண்டது.
ஆனால் 5 ஆம் நாளான இன்று, போட்டி விறுவிறுப்பாக செல்வதால், நேரில் கண்டுகளிக்க ஆர்வமாக வந்துள்ளனர்.
இதற்கிடையே, போட்டியைப் பொறுத்தவரை, 340 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி தற்போதைய நிலவரப்படி 5 விக்கெட் இழப்புடன் 127 ரன்களில் ஆடி வருகிறது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 ரன்களுடனும், நிதிஷ் குமார் ரெட்டி 1 ரணனுடன் களத்தில் ஆடி வருகின்றனர்.