Page Loader
இடி மழையே பெய்தாலும் சிஎஸ்கேயின் பிளே ஆஃப் கன்ஃபார்ம் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன

இடி மழையே பெய்தாலும் சிஎஸ்கேயின் பிளே ஆஃப் கன்ஃபார்ம் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 17, 2024
02:13 pm

செய்தி முன்னோட்டம்

நாளை நடைபெறவுள்ள ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வென்றாலும், மழையால் ரத்து செய்யப்பட்டாலும் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் என்ட்ரி கன்ஃபார்ம் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள். ஏற்கனவே இந்த பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சுவாமி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. தற்போதுள்ள புள்ளிகளின் அடிப்படையில் பார்த்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வது இடத்திற்கு தகுதி பெற்றுள்ளது. அதன் காரணமாக மழை பெய்து போட்டி ரத்து பெற்றாலும், தலா ஒரு புள்ளிகள் பகிரப்பட்டு இடைநிறுத்தப்பட்டாலும், CSK பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

embed

ப்ராக்டிஸில் ஈடுபட்டுள்ள 'தல' தோனி

THA7⃣A. Chinnaswamy!🦁🔥#WhistlePodu #Yellove🦁💛 @msdhoni pic.twitter.com/S7LbfoBM9T— Chennai Super Kings (@ChennaiIPL) May 17, 2024