LOADING...
"நீ என் பாக்கெட்டில் இருக்கிறாய்!" ஜோஸ் பட்லரை வம்புக்கு இழுத்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் ஜட்டுவின் புதிய அவதாரம்
ஜோஸ் பட்லரை வம்புக்கு இழுத்த ரவீந்திர ஜடேஜா

"நீ என் பாக்கெட்டில் இருக்கிறாய்!" ஜோஸ் பட்லரை வம்புக்கு இழுத்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் ஜட்டுவின் புதிய அவதாரம்

எழுதியவர் Sekar Chinnappan
May 10, 2026
06:28 am

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 மோதலில், ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியான பந்துவீச்சு மற்றும் ஜோஸ் பட்லரை நோக்கி அவர் வீசிய நையாண்டி கலந்த ஸ்லெட்ஜிங் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மைதானத்தில் ஜடேஜா செய்யும் 'வாள் வீச்சு' கொண்டாட்டம் உலகப்புகழ் பெற்றது என்றாலும், இந்த முறை அவர் விக்கெட்டை வீழ்த்திய பின் கையாண்ட விதம் ரசிகர்களை ஒரு நிமிடம் திகைக்க வைத்துள்ளது. ஆட்டத்தின் 14வது ஓவரில் ஜோஸ் பட்லருக்கு எதிராக ஒரு புல்லர் லெந்த் பந்தை ஜடேஜா வீச, அதை பட்லர் பலமாக அடிக்க முயன்றார். ஆனால் லாங்-ஆஃப் திசையில் நின்றிருந்த டோனோவன் ஃபெரீரா அந்தப் பந்தை மிக லாவகமாகப் பிடித்து பட்லரை வெளியேற்றினார்.

ரவீந்திர ஜடேஜா

ஜடேஜாவின் ஆக்ரோஷமான கொண்டாட்டம்

இந்த முக்கியமான விக்கெட்டை வீழ்த்திய உத்வேகத்தில், ஜடேஜா சற்றும் எதிர்பாராத விதமாக பட்லரை நோக்கிச் சென்று, "நீ என் பாக்கெட்டுக்குள் இருக்கிறாய்" (You're In My Pocket) என்று சைகை காட்டியது மைதானத்தில் இருந்த வீரர்களையும் ரசிகர்களையும் ஒருசேர ஆச்சரியப்படுத்தியது. ஜடேஜா பொதுவாகத் தனது பந்துவீச்சின் மூலம் பதிலடி கொடுக்கும் அமைதியான வீரராகவே அறியப்பட்டாலும், குஜராத் அணிக்கு எதிரான இந்த இமாலயப் போட்டியில் அவர் காட்டிய இந்த அதிரடி ஆக்ரோஷம் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜடேஜாவின் இந்தச் செயல் தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement