Page Loader
இங்கிலாந்தில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா
விராட் கோலியின் அரைசதங்கள் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா

இங்கிலாந்தில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா

எழுதியவர் Sekar Chinnappan
Jul 13, 2025
09:41 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதம் அடித்து, இங்கிலாந்தில் ஒரு இந்திய பேட்டர் எடுத்த அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்டில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா, மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மதிய உணவுக்கு முன் ரிஷப் பண்டின் ரன் அவுட் மற்றும் கே.எல்.ராகுல் அவரது வரலாற்று சதத்திற்குப் பிறகு அவுட்டாகியது உள்ளிட்ட முக்கிய ஆட்டமிழப்புகளுக்குப் பிறகு நிலைத்து நின்று இந்தியாவின் இன்னிங்ஸை வலுப்படுத்தினார். இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டியுடன் ஆறாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் கூட்டணி அமைத்து, இந்திய அணி 300 ரன்களை கடக்க உதவினார்.

அரைசதம்

அரைசதம் அடித்து சாதனை

இந்த போட்டியில் 87 பந்துகளில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 25வது அரைசதத்தை எட்டினார். மேலும், இதன் மூலம் இங்கிலாந்தில் ஏழாவது அரைசதத்தை பதிவு செய்து, இங்கிலாந்தில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானேவை சமன் செய்தார். மேலும், ஆறு அரைசதங்ளுடன் இருந்த கே.எல்.ராகுல் மற்றும் சேதேஷ்வர் புஜாராவை விஞ்சியுள்ளார். தற்போது, சச்சின் டெண்டுல்கர் (12), ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் மற்றும் குண்டப்பா விஸ்வநாத் (தலா 10) ஆகியோர் மட்டுமே இங்கிலாந்தில் இந்தியாவுக்காக ஜடேஜாவை விட அதிக அரைசதங்கள் குவித்தவர்களாக உள்ளனர். இதற்கிடையே, இந்தியா முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.