டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரவீந்திர ஜடேஜா
செய்தி முன்னோட்டம்
2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதை அடுத்து, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டி20 இல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இந்திய ஆல்ரவுண்டர் விராட் கோலி மற்றும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் தாங்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்த நிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜாவும் டி20 ஓய்வை அறிவித்துள்ளார்.
சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக அறியப்படும் ஜடேஜா, கிட்டத்தட்ட 36 வயதில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
இந்தியா
"அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி": ஜடேஜா
"நன்றி நிறைந்த இதயத்துடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பது போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன். மற்ற வகையிலும் நான் அதைத் தொடர்ந்து செய்வேன். டி20 உலகக்கோப்பையை வெல்வது ஒரு கனவு நனவானது போல் உள்ளது. இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். நினைவுகள், மகிழ்ச்சிகள் மற்றும் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி" என்று இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
வரலாற்று வெற்றி கிடைத்த சில நிமிடங்களிலேயே கோலி தனது ஓய்வை அறிவித்திருந்த நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அந்த போட்டியின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் தனது ஓய்வை அறிவித்தார்.