NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு 
    இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன்

    சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 18, 2024
    11:45 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    கபாவில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றும் போது, ​​இந்திய கிரிக்கெட் வீரராக இதுவே தனது கடைசி நாள் என்று கூறினார்.

    பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து அஸ்வின் அறிவிப்பு வெளியானது.

    அறிவிப்பு

    ஓய்வு அறிவிப்பு

    "சர்வதேச அளவில் அனைத்து வகையான ஆட்டங்களிலும் இந்திய கிரிக்கெட்டாக இது எனது கடைசி நாளாக இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரருக்கு என்னுள் மிச்சம் இருப்பதாக உணர்கிறேன். கிளப் அளவிலான கிரிக்கெட்டில் அதை வெளிப்படுத்த விரும்புகிறேன். எனவே இது எனது கடைசி நாளாக இருக்கும், நான் ரோஹித் மற்றும் எனது சக வீரர்களுடன் இணைந்து நிறைய நினைவுகளை உருவாக்கினேன்" என்று அஸ்வின் கூறினார்.

    ஊகம்

    வைரலாக பரவிய புகைப்படத்தில் கிளம்பிய ஊகம்

    புதன் கிழமை மழை குறுக்கீட்டின் போது கப்பாவில் உள்ள டிரஸ்ஸிங் ரூமில் அஸ்வின் ரவிச்சந்திரன், விராட் கோலியை கட்டிப்பிடித்ததைக் கண்டு அவரது ஓய்வு குறித்த ஊகங்கள் பரவின.

    அஸ்வினும் கோலியும் டிரஸ்ஸிங் ரூமில் தீவிர அரட்டையில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் வதந்திகளுக்கு வழிவகுத்தது.

    மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்த உடனேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டதால், வதந்திகள் நீண்ட காலம் தங்காமல் இருப்பதை அஷ்வின் உறுதி செய்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #SportsClicks | ஆஸ்திரேலியா vs இந்தியா 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் காபா மைதானத்தில்..#SunNews | #ViratKohli | #RavichandranAshwin | @ashwinravi99 | @imVkohli pic.twitter.com/DIX8C5jLE4

    — Sun News (@sunnewstamil) December 18, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அஸ்வின் ரவிச்சந்திரன்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    'சர்ச்சைக்கு இடமில்லை, அலெக்ஸ் கேரியை பாராட்ட வேண்டும்' : அஸ்வின் ரவிச்சந்திரன் ஆஷஸ் 2023
    700 விக்கெட்டுகள் மைல்ஸ்டோனை கடந்த அஸ்வின்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு சச்சின் டெண்டுல்கர்
    'இந்திய அணி நிர்வாகத்திற்கு சரியான பாடம் புகட்டிய அஸ்வின்' : முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய கிரிக்கெட் அணி
    'கிரிக்கெட் வீரர்கள் நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை' : அஸ்வினின் கருத்துக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதில் இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    ஐசிசி தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா; பெண்கள் விளையாட்டு மற்றும் உலகளாவிய வளர்ச்சியில் கவனம் செலுத்த திட்டம் ஜெய் ஷா
    ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க திட்டம்; உடற்தகுதியை ஆய்வு செய்கிறது பிசிசிஐ முகமது ஷமி
    பிங்க்-பால் டெஸ்ட் போட்டி: நான்கு ஆண்டுக்கு முந்தைய தோல்விக்கு பழி தீர்க்குமா இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    யு19 ஆசிய கோப்பையில் 211 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி ஆசிய கோப்பை
    ஹே நண்பனே விட்டு செல்லாதே..! சச்சின் கைகளை இருக பற்றி கொண்ட வினோத் காம்ப்ளி சச்சின் டெண்டுல்கர்
    தோனியுடன் பத்தாண்டுகளாக பேசவில்லை: ஹர்பஜன் சிங் பகீர் தகவல் எம்எஸ் தோனி
    பால்ய வயது நண்பன் வினோத் காம்ப்ளியின் பாடியதை கைதட்டி ரசித்த சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025