அடுத்த செய்திக் கட்டுரை

பார்சிலோனா ஓபனில் இருந்து வெளியேறினார் ரஃபேல் நடால்
எழுதியவர்
Sekar Chinnappan
Apr 14, 2023
07:12 pm
செய்தி முன்னோட்டம்
பார்சிலோனா ஓபனில் பங்கேற்கப் போவதில்லை என ரஃபேல் நடால் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) அறிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "பார்சிலோனா எனக்கு ஒரு சிறப்பு போட்டியாகும். இது நான் ஏற்றுக்கொண்ட கிளப் மற்றும் உள்ளூரில் விளையாடுவது எப்போதுமே ஒரு தனித்துவமான உணர்வு. ஆனால் நான் இன்னும் தயாராக இல்லை. எனவே, போட்டிக்குத் திரும்புவதற்கான எனது தயாரிப்பு செயல்முறையைத் தொடர்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடால் இடது இடுப்பு காயம் காரணமாக, ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விளையாடவில்லை.
பார்சிலோனா ஓபன் ஏப்ரல் 18 முதல் தொடங்குகிறது. நடால் பார்சிலோனா ஓபனை 12 முறை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.