Page Loader
"வாழ்க்கை ஒரு வட்டம் டா!": டேவிஸ் கோப்பையில் தனது முதல் மற்றும் கடைசி போட்டியில் தோற்றதாக நடால் பிரியாவிடை
ரஃபேல் நடால் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

"வாழ்க்கை ஒரு வட்டம் டா!": டேவிஸ் கோப்பையில் தனது முதல் மற்றும் கடைசி போட்டியில் தோற்றதாக நடால் பிரியாவிடை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 21, 2024
12:19 pm

செய்தி முன்னோட்டம்

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் நேற்று முதல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். நடந்து வரும் டேவிஸ் கோப்பை போட்டியே தனது கடைசி ஆட்டம் என அவர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்று அவர் நடந்த இறுதிப் போட்டியில் போடிக் வான் டி சாண்ட்சுல்ப்பிடம் தோல்வியடைந்த ரஃபேல் நடால் டென்னிஸிலிருந்து விடைபெற்றார். சுவாரசியமாக 2004 இல் நடந்த டேவிஸ் போட்டியில் முதல்முறையாக அவர் கலந்து கொண்ட போதும், அவர் தனது முதல் தோல்வியைப் பெற்றார். இதன் மூலம் தனது வாழ்க்கையின் முழு வட்டத்தையும் அவர் முடித்துள்ளார் என ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கடைசி போட்டி

கண்ணீர் மல்க விடை கொடுத்த ரசிகர்கள், பிரியாவிடை பெற்ற நடால்

38 வயதான நடால் ஆடத்தொடங்கும் முன்பே, ஸ்பெயின் அணி தேசிய கீதத்திற்காக வரிசையாக நின்றபோது, 22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற அந்த சாம்பியனின் கண்களில் கண்ணீர் பெருகியது. பலவித உணர்ச்சிகளால் அவர் ததும்பி நின்றது வெளிப்படையாக தெரிந்தது. ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்ற பிறகு, நடாலுக்கு அரங்கம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகமான கைதட்டல் வழங்கினர். ரசிகர்கள் அவரது பெயரை 'ரஃபா... ரஃபா... என்று அரங்கம் அதிர கூச்சலிட்டனர். அப்போது ரசிகர்களிடத்தில் உரையாற்றிய நடால்,"எனது கடைசி போட்டியாக இருந்தால் அது ஒருவிதத்தில் நல்லது. டேவிஸ் கோப்பையில் எனது முதல் போட்டியில் தோற்றேன், கடைசி போட்டியில் தோற்றேன், எனவே நான் ஒரு வட்டத்தினை அடைந்தேன்," என்று அவர் கூறினார்.

பட்டங்கள்

நடால் வென்ற கோப்பைகள்

டேவிஸ் கோப்பையில் ஸ்பெயின் கடைசியாக நெதர்லாந்துடன் 2004ல் காலிறுதியில் விளையாடியது - அதே ஆண்டு நடால், 18 வயது இளைஞனாக சர்வதேச அரங்கில் ஸ்பெயினுக்காக முதல்முறையாக விளையாட அழைக்கப்பட்டார். அதன் பின்னர், மேலும் மூன்று டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டிகளிலும்(2009, 2011 மற்றும் 2019இல்) 22 கிராண்ட்ஸ்லாம்கள் மற்றும் இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அவரது இறுதி போட்டியில், அவருக்கு டென்னிஸ் கோர்ட்டில் ஒரு வீடியோ தொகுப்பு திரையிடப்பட்டது. அதில், டேவிட் பெக்காம், இக்கர் கேசிலாஸ் மற்றும் ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவரது சக டென்னிஸ் போட்டியாளர்களான ரோஜர் ஃபெடரர், நோவக் ஜோகோவிச் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோரும் அவரது ஓய்வுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.