Page Loader
பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றார்
ரஃபேல் நடால் ஓய்வு பெற்றார்

பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றார்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2024
08:07 am

செய்தி முன்னோட்டம்

உலகின் டாப் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் தனது அசாதாரண டென்னிஸ் தொடர்கதையின் இறுதி அத்தியாயத்தினை நேற்று எழுதினார். ஆம், நேற்று அவரது கடைசி போட்டி. அதோடு அவர் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். நவம்பர் 19, செவ்வாயன்று தனது இறுதிப் போட்டியை டென்னிஸ் ஜாம்பவான் விளையாடினார். டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் நெதர்லாந்திற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது நடால் தனது கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் தோற்றார். கடைசி ஆட்டத்திற்கு பின்னர் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் உணர்ச்சி பெருக்கோடும், கலங்கிய கண்களுடனும் நடால் உரையாற்றினார். நடால் தனது நன்றியைத் தெரிவித்தபோது, ​​"ரஃபா, ரஃபா" என்ற கோஷங்கள் அரங்கம் முழுவதும் எதிரொலித்தன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post