Loading...
முக்கியமான நேரத்தில் தசைப்பிடிப்பு! சீன வீராங்கனையிடம் போராடி தோற்ற பிவி சிந்து - விக்டர் குமார் விளக்கம்
சீன வீராங்கனையிடம் போராடி தோற்ற பிவி சிந்து

முக்கியமான நேரத்தில் தசைப்பிடிப்பு! சீன வீராங்கனையிடம் போராடி தோற்ற பிவி சிந்து - விக்டர் குமார் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2026
02:06 pm

செய்தி முன்னோட்டம்

புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். உலகின் 3 ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் ஜி யி உடனான ஆட்டத்தில், 11-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் 88 நிமிடங்கள் போராடி சிந்து தோல்வியைத் தழுவினார். சொந்த மண்ணில் 6 வது உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வெல்லும் சிந்துவின் கனவு இதன் மூலம் தகர்ந்தது.

போராட்டம்

வெற்றியின் விளிம்பில் இருந்து நழுவிய போட்டி

தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் பிவி சிந்து 8-4 என்ற புள்ளிக் கணக்கில் வலுவான முன்னிலையில் இருந்தார்.

மைதானத்தில் இருந்த ரசிகர்களின் பேராதரவோடு வெற்றியை நோக்கிச் சென்ற சிந்து, அவசரப்பட்டுப் புள்ளிகளைப் பெற முயன்றதால் தேவையற்ற தவறுகளை புரிந்தார்.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சீன வீராங்கனை வாங் ஜி யி, தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து 13-15 என முன்னிலை பெற்றார்.

இதனால் போட்டி இருவருக்கும் இடையே மிகக் கடுமையான போராட்டமாக மாறியது.

தசைப்பிடிப்பு

மைதானத்தில் நிலவிய தசைப்பிடிப்பு நாடகமும் மருத்துவ இடைவேளையும்

போட்டி 16-15 என்ற புள்ளிக் கணக்கில் இருந்த போது, சீன வீராங்கனை வாங் ஜி யி இடது தொடையில் ஏற்பட்ட கடும் தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தில் விழுந்தார்.

உடனடியாக அவருக்கு மருத்துவ இடைவேளை அளிக்கப்பட்டது.

மீண்டும் விளையாட்டு தொடங்கிய பிறகும், மற்றொரு நீண்ட 54 ஷார்ட் ரேலிக்குப் பிறகு மீண்டும் அவர் தசப்பிடிப்பால் அவதிப்பட்டார்.

இந்தத் தொடர் இடைவேளைகள் போட்டியின் வேகத்தைக் குறைத்து, சிந்துவின் கவனத்தையும் ஆட்டத்தின் போக்கையும் பெருமளவில் பாதித்தன.

ADVERTISEMENT

விதிகள்

பேட்மிண்டன் விதிகள் கூறுவது என்ன?

சீன வீராங்கனையின் இந்த தந்திரமான இடைவேளைகள் குறித்துப் பேசிய முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளர் விமல் குமார், "வாங் ஜி யியின் தந்திரம் அவருக்குக் கை கொடுத்தது.

இருப்பினும், முக்கியத் தருணங்களில் சிந்து பந்தை மைதானத்திற்குள்ளேயே வைத்திருந்து பொறுமையாக விளையாடியிருக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.

பேட்மிண்டன் விதிமுறைகளின்படி, விளையாட்டு வீரர்களுக்குக் காயம் ஏற்படும் போது நடுவர்கள் மருத்துவ உதவிக்கு அனுமதிக்கலாம் என்பதால், சீன வீராங்கனையின் செயல் விதிமுறைகளுக்கு உட்பட்டே அமைந்தது.

ADVERTISEMENT

எதிர்காலம்

பயிற்சியாளர்களின் மிதமிஞ்சிய வழிகாட்டலும் பிவி சிந்துவின் எதிர்காலமும்

போட்டியின் போது பயிற்சியாளர்கள் வெளியிலிருந்து அதிகமான அறிவுரைகளை வழங்குவது, சில நேரங்களில் வீரர்களின் சொந்த யோசனை மற்றும் முடிவெடுக்கும் திறனை பாதிப்பதாக விமல் குமார் சுட்டிக்காட்டினார்.

களத்தில் சூழ்நிலையை உணர்ந்து முடிவெடுக்கும் சுதந்திரம் வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தோல்வி வருத்தமளிப்பதாக இருந்தாலும், சிந்து தற்போதைய திறனுடன் தொடர்ந்து விளையாடினால் எதிர்வரும் தொடர்களில் மீண்டும் பழையபடி சாதிக்க முடியும் என விளையாட்டு பகுப்பாய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT