
புரோ கபடி லீக் : புனேரி பல்தான் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி
செய்தி முன்னோட்டம்
திங்களன்று (டிசம்பர் 4) அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியாவின் இகேஏ அரங்கில் நடைபெற்ற புரோ கபடி லீக் பத்தாவது சீஸனின் ஐந்தாவது ஆட்டத்தில் புனேரி பல்தான் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை தோற்கடித்தது.
நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஆரம்பத்தில் புனேரி பல்தான் மீது ஆதிக்கம் செலுத்தினாலும், இரண்டாம் பாதியில் பல்தான் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் பாதி முடிவில் பாந்தர்ஸ் 14-10 என்ற புள்ளிக்கணக்கில்,4 புள்ளிகள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் பாதியில் அதை முறியடித்து பல்தான்கள் ஆட்டநேர முடிவில் 37-33 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
பல்தான் கேப்டன் அஸ்லாம் இனாம்தார் 10 ரெய்டு புள்ளிகள் எடுத்து அணி வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
Bengal warriors beats Bengaluru Bulls in PKL 10
பெங்களூரு புல்ஸை புரட்டியெடுத்த பெங்கால் வாரியர்ஸ்
திங்கட்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் அணியை பெங்கால் வாரியர்ஸ் எதிர்கொண்டது.
பெங்களூர் புல்ஸ் ஏற்கனவே ஒரு போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸிடம் தோற்றுள்ள நிலையில், இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இரு அணிகளுமே போட்டி முழுவதும் கடுமையாக போராடிய நிலையில், முதல் பாதி முடிவில் பெங்கால் வாரியர்ஸ் 14-11 என முன்னிலை பெற்றனர்.
அதன் பின்னர் பெங்களூர் கடுமையாக முயன்றும் இறுதியில் பெங்கால் வாரியர்ஸிடம் 30-32 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றது.
பெங்களூர் இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்துள்ள நிலையில், பெங்கால் வாரியர்ஸ் தனது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.