
INDvsENG 2வது டெஸ்ட்: அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஜடேஜாவின் மோசமான சாதனையை சமன் செய்தார் பிரஷித் கிருஷ்ணா
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 3வது நாளில், பிரசித் ஒரே ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவின் சாதனையை சமன் செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் 32வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சை சிதறடித்து நான்கு பவுண்டரிகள், ஒரு பெரிய சிக்ஸர் மற்றும் ஒரு வைடு என அந்த ஓவரில் 23 ரன்கள் எடுத்தார்.
முதல் இடம்
அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தவர்களில் முதல் இடம்
பிரசித் கிருஷ்ணா இப்போது அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்களில் நான்காவது இடத்தில் உள்ள ரவீந்திர ஜடேஜாவின் சாதனையை சமன் செய்துள்ளார். ஜடேஜா முன்னதாக, 2024 இல் ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் ஹர்பஜன் சிங் முதலிடத்தில் உள்ளார். இவர் 2006 இல் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிராக 27 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இதற்கிடையே, இந்த தொடரின் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் 6.40 என்ற எகானமியில் 3/128 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இது ஒரே நேரத்தில் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் வீசிய எந்த இந்திய பந்து வீச்சாளருக்கும் இல்லாத மோசமானது.