Loading...
ஆசிய விளையாட்டில் வரலாறு படைத்த பிரணவி அர்ஸ்: கோல்ஃபில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண்
ஆசிய விளையாட்டு போட்டியில் கோல்ஃப் பிரிவில் பிரணவி அர்ஸ் தங்கம் வென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டில் வரலாறு படைத்த பிரணவி அர்ஸ்: கோல்ஃபில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண்

எழுதியவர் Vasuki
Oct 03, 2026
12:43 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் தனிநபர் கோல்ஃப் பிரிவில் இந்தியாவின் பிரணவி அர்ஸ் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே கோல்ஃப் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், 2002 புசான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷிவ் கபூர் ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றதற்குப் பிறகு, 24 ஆண்டுகள் கழித்து இந்தியா கோல்ஃப் பிரிவில் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.

நெருக்கடிகளைத் தாண்டி நிலைநிறுத்திய வெற்றி

நெருக்கடிகளைத் தாண்டி நிலைநிறுத்திய வெற்றி

மைசூரைச் சேர்ந்த 23 வயதான பிரணவி அர்ஸ், போட்டியின் இறுதிச் சுற்றின் 3-வது துளையில் டிரிபிள் போகி பெற்று ஆரம்ப முன்னிலையை இழந்தார்.

எனினும், உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், அடுத்தடுத்த துளைகளில் 3 பேர்டிகளை அடித்து ஆட்டத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இறுதிச் சுற்றில் ஈவன்-பார் 70 புள்ளிகளைப் பதிவு செய்த அவர், நான்கு சுற்றுகளின் முடிவில் 15-அண்டர் 265 புள்ளிகளுடன் தனது நெருங்கிய போட்டியாளர்களை விட ஒரு ஸ்ட்ரோக் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுத் தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

பிரணவி உர்ஸின் இந்த சிறப்பான ஆட்டம், இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கும் வழிவகுத்தது.

இறுதிச் சுற்றில் அதிதி அசோக் 67 புள்ளிகளும், தீக்ஷா தாகர் 77 புள்ளிகளும் பெற்றனர்.

சிறந்த இரு வீரர்களின் புள்ளிகள் கணக்கில் கொள்ளப்பட்டதன் அடிப்படையில், இந்திய அணி 14-அண்டர் 546 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தியது.

சீன அணி 22-அண்டர் 538 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

ADVERTISEMENT