NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / குருவை விஞ்சிய சிஷ்யன்; WR செஸ் மாஸ்டர்ஸில் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா
    அடுத்த செய்திக் கட்டுரை
    குருவை விஞ்சிய சிஷ்யன்; WR செஸ் மாஸ்டர்ஸில் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா
    WR செஸ் மாஸ்டர்ஸில் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா

    குருவை விஞ்சிய சிஷ்யன்; WR செஸ் மாஸ்டர்ஸில் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 17, 2024
    02:12 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா லண்டனில் நடந்த டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸில் தனது வழிகாட்டியான ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை காலிறுதியில் முறியடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இது 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்களின் முதல் ஓவர்-தி-போர்டு மோதலாகும். முதல் இரண்டு போட்டிகளும் டிராவில் முடிவடைந்த போதிலும், பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு செல்ல இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

    மறுபுறம் விஸவநாதன் ஆனந்திற்கு இந்த போட்டியில் டிரா மட்டுமே தேவைப்பட்ட நிலையில், காலிறுதியில், இரண்டு முன்னணி வீரர்களும் கடுமையாகப் போட்டியிட்டனர்.

    விஸ்வநாதன் ஆனந்த் தற்காப்பில் பலத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்தின் அச்சுறுத்தல்களை நடுநிலையாக்கி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    பிரக்ஞானந்தா

    பிரக்ஞானந்தா வெற்றி

    இறுதியில் பிரக்ஞானந்தா அர்மகெடான் டைபிரேக்கரில் வெற்றி பெற்று, அரையிறுதியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

    அரையிறுதியில், சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசிக்கு எதிராக பிரக்ஞானந்தா கடுமையான சவாலை எதிர்கொண்டார். அர்ஜுன் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றார் மற்றும் இரண்டாவது கேமில் பிரக்ஞானந்தாவை டிரா செய்ய வைத்தார்.

    அர்ஜுனின் மூலோபாய ஆட்டமும், எதிராளியின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் திறனும் அபாரமாக இருந்தது.

    இதற்கிடையே மற்றொரு அரையிறுதியில் அலிரேசா ஃபிரோஸ்ஜாவை தோற்கடித்த மேக்சிம் வாசீர் லாக்ரேவ்விற்கு எதிராக இறுதிப் போட்டியில் அர்ஜுன் எரிகைசி விளையாட உள்ளார்.

    பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுனின் செயல்திறன் இந்தியாவின் இளம் செஸ் திறமைகளின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரக்ஞானந்தா
    செஸ் போட்டி
    விளையாட்டு

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    பிரக்ஞானந்தா

    உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் டிரா; இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா? செஸ் போட்டி
    செஸ் உலகக்கோப்பையில் பிரக்ஞானந்தாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு? காரணம் இதுதான் செஸ் உலகக் கோப்பை
    செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இரண்டாவது சுற்று ஆட்டமும் டிரா செஸ் உலகக் கோப்பை
    பிரக்ஞானந்தாவின் வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் போட்டியின் விதிகள் செஸ் போட்டி

    செஸ் போட்டி

    விஸ்வநாதன் ஆனந்தின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் கிராண்ட்மாஸ்டர்
    உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஆர்.பிரக்ஞானந்தா உலக கோப்பை
    செஸ் உலகக் கோப்பை: கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த மூன்றாவது இளைஞர் பிரக்ஞானந்தா  கிராண்ட்மாஸ்டர்
    செஸ் உலகக் கோப்பை 2023 : இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி பிரக்ஞானந்தா

    விளையாட்டு

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் மகளிர் ஐபிஎல்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    உடற்பயிற்சி இலக்குகளை அடைவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்ட்ராவா செயலி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உடற்பயிற்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025