புரோ கபடி லீக் : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs புனேரி பல்தான் முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்
செய்தி முன்னோட்டம்
புரோ கபடி லீக் பத்தாவது சீசனின் 5வது ஆட்டத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 4) அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டாண்டியா அரங்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன் புனேரி பல்தான் அணி மோத உள்ளது.
இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி என்பதால் வெற்றியுடன் இரு அணிகளும் வெற்றியுடன் சீசனை தொடங்குவதற்கான முனைப்பில் உள்ளன.
முந்தைய சீசனின் வெற்றியாளரான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு, கடந்த முறை கேப்டன் பொறுப்பை வகித்த சுனில் குமார் மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார்.
மறுபுறம், புனேரி பல்தான் அணியில் தற்போதுள்ள வீரர்களின் ஃபார்மைக் கருத்தில் கொண்டு வெற்றியை எதிர்பார்க்கிறது.
Jaipur Pink Panthers vs Puneri Paltan Head to Head Stats
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs புனேரி பல்தான் நேருக்கு நேர் புள்ளிவிபரம்
முந்தைய சீசன்களில் புனேரி பல்தான் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் 11 முறை புனேரி பல்தான் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. மறுபுறம், நடப்பு சாம்பியனாக இருந்தாலும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் புனேரி பல்தானை விட வெற்றிகளின் அடிப்படையில் சற்று பின்தங்கியே உள்ளது.
புனேரி பல்தான் அணியில் அஸ்லாம் இனாம்தார் கவனிக்க வேண்டிய முக்கிய வீரராக இருப்பார்.
இந்த ஆண்டு புனேரி பல்தானை வழிநடத்தும் பணி இளம் வயது அஸ்லாம் இனாம்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக சுனில் குமார் இந்த போட்டியில் பெரிய பங்கை வகிப்பார்.
மேலும் டிஃபெண்டரின் திறமை போட்டியின் தலைவிதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
Jaipur Pink Panthers vs Puneri Paltan Starting 7 Where to watch
தொடக்க 7, போட்டி நடைபெறும் இடம், நேரம் மற்றும் நேரடி ஒளிபரப்பு விபரங்கள்
இரு அணிகளின் தொடக்க 7 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
புனேரி பல்தான் : அஸ்லாம் இனாம்தார் (கேப்டன்), மோஹித் கோயத், ஆகாஷ் ஷிண்டே, முகமதுரேசா ஷட்லூயி சியானே, கௌரவ் காத்ரி, அபினேஷ் நடராஜன், சங்கேத் சாவந்த்.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் : சுனில் குமார் (கேப்டன்), அர்ஜுன் தேஷ்வால், வி அஜித் குமார், அங்குஷ், சாஹுல் குமார், ரேசா மிர்பாகேரி மற்றும் ராகுல் சவுதாரி.
அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டாண்டியா அரங்கில் திங்கட்கிழமை (டிசம்பர் 4) இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியிலும், டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் போட்டியை நேரலையில் காணலாம்.