Page Loader
பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம்
பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம்

பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 01, 2023
07:21 pm

செய்தி முன்னோட்டம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் அரை மணி நேரம் தாமதமானது. மொகாலியில் உள்ள பிசிஏ-ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த உயரத்தில் மொத்தம் ஆறு ஃப்ளட்லைட்கள் உள்ளன. இந்திய ஸ்டேடியங்களில் ஃப்ளட்லைட் செயலிழப்பு பொதுவாக அடிக்கடி நடக்கும் ஒன்றாகவே உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் முதல் இன்னிங்ஸ் முடிந்து இடைவேளைக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங் செய்ய மைதானத்தில் வந்தனர். ஆனால் பல டவர்களில் நிறைய பல்புகள் எரியவில்லை. இதையடுத்து வீரர்கள் திரும்பவும் டிரஸ்ஸிங் அறைக்குள் சென்றனர்.

பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

போட்டி தாமதத்தால் ஒளிபரப்பாளர்களுக்கும் சிக்கல்

ஸ்டேடியத்தைப் பராமரிக்கும் பொறுப்பு பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திடம் உள்ளது மற்றும் அதிகப்படியான தாமதம் நிச்சயமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சங்கடமாக மாறியுள்ளது. பிரச்சினை சரிசெய்யப்பட்டு 5.50 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டாலும், இதற்கு பிசிசிஐயிடம் இருந்து வலுவான கண்டனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும் நிலையில், இந்த தாமதம் போட்டியின் ஒளிபரப்பாளர்களுக்கும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்களும், பானுக ராஜபக்ச 50 ரன்களும் எடுத்தனர்.