ஐபிஎல் போட்டிகளுக்கிடையே குடும்பத்தாருடன் பிராத்தனையில் ஈடுபட்ட பாண்டியா சகோதரர்கள்
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதியதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை இந்த அணி பதிவு செய்துள்ளது. முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விலகி, MI அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற ஹர்திக் பாண்டியா, ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை கருத்துகளையும், அரங்கத்தில் பலத்த ஆர்பாட்டத்தையும் சந்தித்துவருகிறார். கூடுதலாக அணியின் தொடர் தோல்வி அவரை துவழச்செய்தது. இதற்கிடையே போட்டிக்கு முன்னர், குஜராத்திலுள்ள சோம்நாத் கோவிலில் அபிஷேகம் ஆராதனைகள் செய்து வழிபாட்டார், ஹர்திக். தொடர்ந்து MI அணி வெற்றி பெறவே, தற்போது பாண்டியா சகோதரர்கள், தங்கள் வீட்டிலேயே பஜனை நடத்தி இறைவனை வழிபட்டுள்ளனர்.
பிராத்தனையில் ஈடுபட்ட பாண்டியா சகோதரர்கள்
Hardik and Krunal Pandya join in singing at a kirtan with their family. 🎶 #Bollywood #HardikPandya #KrunalPandya #FilmyApe pic.twitter.com/CvzNe8UPz2— Filmyape (@Filmyape) April 9, 2024