
ஆசிய கோப்பை; பந்தாடிய பாபர் அசாம்-இப்திகார் கூட்டணி; நேபாளத்துக்கு இமாலய இலக்கு
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கிய ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபாள அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது.
போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் 7 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்ததோடு, 28வது ஓவரில் 124 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் அதன் பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது ஜோடி அணியின் ஸ்கோரை 342 ஆக உயர்த்தினர்.
இதில் பாபர் அசாம் 151 ரன்களுக்கு அவுட்டான நிலையில், இப்திகார் அகமது கடைசி வரை அவுட்டாகாமல் 109 ரன்கள் எடுத்தார்.
milestones achieved in pak vs nep first innings
போட்டியில் எட்டப்பட்ட முக்கிய மைல்ஸ்டோன்கள்
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19வது சதத்தை பதிவு செய்த பாபர் அசாமுக்கு இது அதிகபட்ச ஒரு இன்னிங்ஸ் ஸ்கோராகும். முகமது ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்தார்.
இந்த போட்டியில் இப்திகார் அகமது 109 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் குவித்த ஜோடி என்ற சாதனையை பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது படைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, 2009இல் இலங்கைக்கு எதிராக யூனிஸ் கான் மற்றும் உமர் அக்மல் 176 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.