Loading...
'இந்தியாவில் விளையாட மாட்டோம்'; மாஸ்டர்ஸ் உலகக்கோப்பையிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விலகல்
மாஸ்டர்ஸ் உலகக்கோப்பையிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விலகல்

'இந்தியாவில் விளையாட மாட்டோம்'; மாஸ்டர்ஸ் உலகக்கோப்பையிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விலகல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 22, 2026
11:18 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தான் வெட்டரன்ஸ் கிரிக்கெட் சங்கம் விடுத்த கோரிக்கையை பிசிபி அமைப்பு முழுமையாக நிராகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த தொடரிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விலகிக் கொள்வதாக அதன் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போட்டி அமைப்பாளர்கள் உடனடியாக மாற்று அணியைத் தேர்வு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிசிபி உத்தரவு

பிசிபி தலைவர் மோசின் நக்வி உத்தரவு

பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சராகவும், பிசிபி தலைவராகவும் பதவி வகிக்கும் மோசின் நக்வி இத்தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு செல்ல அனுமதி வழங்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

போட்டி அமைப்பாளர்கள் சார்பில் வீரர்களுக்கு விசா மற்றும் உயர்மட்டப் பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட பிறகும், பாகிஸ்தான் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் இந்தப் பயணத்திற்கு அனுமதி மறுத்துள்ளன.

இதனால் வீரர்களின் நீண்டகால பயிற்சி முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு சாம்பியன்

பட்டத்தைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழந்த நடப்பு சாம்பியன்

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அரசின் திடீர் தடை காரணமாக, நடப்பு சாம்பியனான பாகிஸ்தானால் தனது பட்டத்தைத் தக்கவைக்க போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருந்த மூத்த வீரர்களுக்கு இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ADVERTISEMENT

முடக்கம்

தொடரும் விளையாட்டுத்துறை முடக்கங்கள் மற்றும் பதற்றம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றம் காரணமாக, இரு நாடுகளும் நடுநிலை மைதானங்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரிலும் பங்கேற்க பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் மறுப்பு தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி மாற்று அணியாக சேர்க்கப்பட்டது போல, தற்போது கிரிக்கெட்டிலும் இத்தகைய முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT