Page Loader
ஆசிய கிரிக்கெட் கோப்பை ரத்து? 5 நாடுகள் தொடரை நடத்த இந்தியா திட்டம்!
ஆசிய கிரிக்கெட் கோப்பையை ரத்து செய்ய பாகிஸ்தான் திட்டம்

ஆசிய கிரிக்கெட் கோப்பை ரத்து? 5 நாடுகள் தொடரை நடத்த இந்தியா திட்டம்!

எழுதியவர் Sekar Chinnappan
May 01, 2023
05:20 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்துவது குறித்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படாததால், அந்த நேரத்தில் 5 நாடுகளின் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தானில் விளையாட முடியாது என கூறிவிட்டதால் போட்டியை எப்படி நடத்துவது என்பதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் செப்டம்பரில் பாகிஸ்தானில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஆசிய கோப்பையை ரத்து செய்ய வழிவகுக்கும் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வர ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் ஆசிய கோப்பையை ஹைபிரிட் மாடலில் இந்தியா விளையாடும் போட்டியை மட்டும் நடுநிலை மைதானங்களில் விளையாட ஆலோசனை வழங்கியது.

What happens if pakistan cancels asia cup

ஐந்து நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை நடத்த இந்தியா திட்டம்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனையை ஏற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டதாகவும், ஆசிய கோப்பையை ரத்து செய்ய தயாராகி வருவதாகவும் பாகிஸ்தான் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டால், இந்தியா 5 நாடுகள் கொண்ட தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. எனினும், ஆசிய கோப்பையை நடத்த பாகிஸ்தான் மறுத்துவிட்டால், அதை தங்கள் நாட்டில் நடத்த இலங்கையும் ஆர்வம் காட்டி வருகிறது. முன்னதாக, கடந்த வருடம் இலங்கையில் நடத்தப்பட இருந்த ஆசிய கோப்பை தொடர் கடைசி நேரத்தில் உள்நாட்டு சிக்கலால் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.