
இதே நாளில் அன்று : ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் கோப்பையை கைப்பற்றிய தினம்
செய்தி முன்னோட்டம்
2010இல் இதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் கோப்பையை கைப்பற்றியது.
முன்னதாக ஐபிஎல் 2010 தொடரின் அரையிறுதியில் அப்போதைய நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்ட சிஎஸ்கே, 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே சுரேஷ் ரெய்னாவின் அரைசதம் மூலம் 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்தது.
169 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் சிஎஸ்கே ஐபிஎல்லில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றியது. மேலும் இதுவரை 4 பட்டங்களை சிஎஸ்கே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சிஎஸ்கே ட்வீட்
The batch of 10’ that ruled the Den!🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) April 25, 2023
✍🏻 your favorite Moment from the season#AndhaNaalGyabagam #WhistlePodu 💛 pic.twitter.com/DXZAJ3iXyD