NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சிஎஸ்கேயில் எம்எஸ் தோனியின் அடுத்த வாரிசு யார்? பயிற்சியாளர் ஃப்ளெமிங் பதில் இதுதான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிஎஸ்கேயில் எம்எஸ் தோனியின் அடுத்த வாரிசு யார்? பயிற்சியாளர் ஃப்ளெமிங் பதில் இதுதான்
    சிஎஸ்கேயில் எம்எஸ் தோனியின் அடுத்த வாரிசு குறித்து பயிற்சியாளர் ஃப்ளெமிங் பதில்

    சிஎஸ்கேயில் எம்எஸ் தோனியின் அடுத்த வாரிசு யார்? பயிற்சியாளர் ஃப்ளெமிங் பதில் இதுதான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 20, 2023
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2024 சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வரும் நிலையில், எம்எஸ் தோனியின் வாரிசு யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் புதிராகவே உள்ளது.

    ரவீந்திர ஜடேஜா 2022இல் தோனியின் வாரிசாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஆனால் ஜடேஜா தலைமையில் அணி தொடர்ந்து தோல்வியைத் தழுவியதால், அவர் பாதியிலேயே கேப்டன் பொறுப்பை கைவிட்டதோடு, அந்த தொடரில் இருந்தும் விலகினார்.

    இதனால், தொடரின் மத்தியில் மீண்டும் கேப்டன் பொறுப்பேற்ற தோனி, 2023 சீசனிலும் கேப்டனாக இருந்து அணிக்கு ஐந்தாவது பட்டத்தை வென்று கொடுத்தார்.

    இந்நிலையில், அணியின் கேப்டனாக ஜடேஜா திரும்புவது சாத்தியமில்லை என்றாலும், புதிய கேப்டனுக்கான வேட்டை தொடர்கிறது.

    Stephen Fleming answers MS Dhoni's Succession Plan

    பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கருத்து

    ஐபிஎல் 2024 ஏலத்திற்காக துபாய் சென்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் எம்எஸ் தோனிக்கான வாரிசு திட்டம் குறித்து கேட்கப்பட்டதற்கு, அவர் எதிர்பாராத பதிலை அளித்தார்.

    துபாயில் நடந்த ஏலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, கடந்த 10 ஆண்டுகளாக தோனிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வாரிசு திட்டங்களை வைத்திருந்ததாகவும், ஆனால் அவர் எப்போதும் இல்லாத அளவுக்கு உற்சாகத்துடன் அணியை வழிநடத்தி வருவதாகவும் ஃப்ளெமிங் கூறினார்.

    ஃப்ளெமிங் வெளிப்படையாக எதையும் கூறாத நிலையில், தோனி இந்த சீசனில் விளையாடுவது ஏற்கனவே உறுதியாகிவிட்ட ஒன்றாக உள்ளது.

    இதனால் இந்த சீசனுக்கு பிறகே தோனியின் வாரிசு குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்எஸ் தோனி
    ஐபிஎல்
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2024

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    எம்எஸ் தோனி

    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன் ஐபிஎல்
    'தோனியை மிஞ்சமுடியுமா' : டைமிங்காக ட்வீட் வெளியிட்டு கலக்கிய வீரேந்திர சேவாக்! வீரேந்திர சேவாக்
    முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்கிறாரா எம்எஸ் தோனி? சிஎஸ்கே காசி விஸ்வநாதன் விளக்கம்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    கையில் பகவத் கீதையுடன் இருக்கும் எம்எஸ் தோனி! வைரலாகும் புகைப்படம்! சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல்

    LSG அணியின் மென்டாராக இணையும் ராகுல் டிராவிட்? கிரிக்கெட்
    2024 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள் ஐபிஎல் 2024
    Sports Round Up : தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழகம் அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள் ஐபிஎல் 2024
    IPL 2024 : செயல்படாத ப்ரித்வி ஷாவை அணியிலேயே தக்கவைக்க டெல்லி கேப்பிடல்ஸ் முடிவு ஐபிஎல் 2024

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2023 : கொட்டித்தீர்த்த கனமழை! இறுதிப்போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : இது நடந்தால் டக்வொர்த் லூயிஸ் விதியின்படி வெற்றியாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு! ஐபிஎல்
    'இது தான் எனது கடைசி போட்டி' : ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : கடைசி பந்துவரை திக்திக்! குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஐந்தாவது பட்டத்தை கைப்பற்றியது சிஎஸ்கே! ஐபிஎல்

    ஐபிஎல் 2024

    IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிரிட்டோரியஸ் விலகல் ஐபிஎல்
    IPL 2024 : எம்எஸ் தோனியை அணியில் தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs ஆஸ்திரேலியா
    IPL 2024 : அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025