ஒலிம்பிக் 2024: நீரின் தரம் மோசமாக இருந்ததால் டிரையத்லான் போட்டியின் பயிற்சி அமர்வு ரத்து
பாரிஸ் ஒலிம்பிக்கில், சமீபத்தில் பெய்த கனமழையால் சீன் ஆற்றில் நீர் தரம் பாதித்ததால், டிரையத்லான் கலப்பு ரிலே போட்டிக்காக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெறவிருந்த நீச்சல் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் பெய்த மழையைத் தொடர்ந்து தண்ணீரின் தரம் தேவையான வரம்பை எட்டவில்லை என்று சோதனைகள் காட்டியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே, பயிற்சி போட்டிகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நிலையில், கலப்பு தொடர் ஓட்டப் போட்டி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மணிநேரங்களில் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தாலும், அது போட்டி நடைபெறுவதற்கு தேவையான அளவிற்கு இருக்காது எனக் கூறப்படுகிறது.