
ODI World Cup Prize Money : இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா!
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில். நவம்பர் 19 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடக்க உள்ளது.
இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒருநாள் உலகக்கோப்பை டிராபி மட்டுமல்லாது மிகப்பெரிய பரிசுத் தொகையும் கிடைக்கும்.
மேலும் இறுதிப்போட்டியில் தோற்ற அணி, அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் மட்டுமல்லாது லீக் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து அணிகளுமே ஐசிசியிடமிருந்து பரிசுத் தொகையைப் பெறும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) போட்டி தொடங்குவதற்கு முன்பு மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை அறிவித்தது.
ODI World Cup 2023 Prize money Complete Details
இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் அணிக்கு 40 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.33 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும்.
மேலும், இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவும் அணிக்கு 20 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
தவிர, அரையிறுதியில் தோற்ற அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலரும், லீக் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்கு தலா 1 லட்சம் அமெரிக்க டாலருக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், லீக் சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு தலா 40,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது.