ODI World Cup Player of the Tournament : 1992 முதல் 2019 வரை தொடர் நாயகன் விருது வென்றவர்களின் பட்டியல்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இறுதிப்போட்டியை நடத்த தயாராகி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா பட்டத்தை வெல்வதற்கான பலப்பரீட்ச்சையில் ஈடுபட உள்ள நிலையில், இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை வெல்லப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிக விவாதப்பொருளாகி உள்ளது. பல பெயர்கள் தொடர்நாயகன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும், விராட் கோலி அல்லது முகமது ஷமிக்கே விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதற்கு முன்னர் ஒருநாள் உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.
தொடர்நாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியல்
1992இல், உலகக்கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வீரரை அங்கீகரிப்பதற்காக தொடர்நாயகன் விருதை ஐசிசி அறிமுகப்படுத்தியது. நியூசிலாந்தின் மார்ட்டின் குரோவ் இந்த விருதை வென்ற முதல் வீரர் ஆவார். சச்சின் டெண்டுல்கர் 2003இல் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் ஆனார். கேன் வில்லியம்சன் இந்த விருதை வென்ற முதல் கேப்டன் ஆவார். முழு பட்டியல் 1992 - மார்ட்டின் குரோவ் (நியூசிலந்து) 1996 - சனத் ஜெயசூர்யா (இலங்கை) 1999 - லான்ஸ் க்ளூசனர் (தென்னாப்பிரிக்கா) 2003 - சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 2007 - கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) 2011 - யுவராஜ் சிங் (இந்தியா) 2015 - மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) 2019 - கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)