LOADING...
சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா
சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

எழுதியவர் Sekar Chinnappan
Sep 08, 2023
01:34 pm

செய்தி முன்னோட்டம்

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினார். ஜெய் ஷா டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய புகைப்படத்தை பிசிசிஐ எக்ஸ் சமூக ஊடக தளத்தில் வெளியிட்டது. கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியா ஐகான்ஸ் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, சச்சின் டெண்டுல்கருக்கு இந்த டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கிரிக்கெட்டின் சிறப்பு மற்றும் தேசிய பெருமையின் அடையாளமாக உள்ள சச்சின் டெண்டுல்கரின் பயணம் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவர் இப்போது 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பார்." எனத் தெரிவித்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கும் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post