ஆப்கானிஸ்தான் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்! ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டம்!
செய்தி முன்னோட்டம்
பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் பிஸியான கால அட்டவணையின் காரணமாக திட்டமிடப்பட்ட இந்தியா vs ஆப்கானிஸ்தான் தொடர் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இளம் வீரர்கள் கொண்ட அணியை தற்போது களமிறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, மூத்த வீரர்கள் குறிப்பாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோருக்கு தேவையான ஓய்வு அளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குவார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, ஐபிஎல் 2023 சீசனுக்குப் பிறகு அனைத்து இந்திய வீரர்களும் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
bcci will make hardik pandya as captain
இந்திய அணியின் போட்டி அட்டவணை
ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் ஓய்வில்லாமல் விளையாடும் இந்திய வீரர்கள் ஜூலை 12முதல் ஆகஸ்ட் 13வரை இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் செல்ல உள்ளனர்.
இந்த தொடருக்கு பிறகு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரும் வரிசையாக நடக்க உள்ளன.
இதனால் ஜூன்20 முதல் 30 வரை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் தொடரை டி20 தொடராக மாற்றி இளம் வீரர்களை விளையாட வைக்கும் முடிவுக்கு இந்திய அணி வந்துள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டியை நேரில் காண வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரிடம் ஆலோசித்து பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.