Page Loader
INDvsPAK : அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இடமில்லை? இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

INDvsPAK : அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இடமில்லை? இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

எழுதியவர் Sekar Chinnappan
Oct 14, 2023
11:01 am

செய்தி முன்னோட்டம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 இன் 12வது போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 14) மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்க உள்ள நிலையில், இதுவரை பாகிஸ்தானுடன் ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியையே கண்டிராத சாதனையை தக்கவைக்க இந்திய அணி தீவிர பயிற்சியில் உள்ளது. இதற்கிடையே, இந்தியாவின் முந்தைய இரண்டு போட்டிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில் பங்கேற்காத நிலையில், இதில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், கேப்டன் ரோஹித் ஷர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் 99% பங்கேற்க வாய்ப்புள்ளது எனக் கூறியதால், அவர் நிச்சயம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

India expected playing 11 for Pakistan match

அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இடமில்லை

ஷுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டால், இஷான் கிஷன் அணியின் விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அகமதாபாத் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளார்களே அதிக விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர் என்பதால், இந்த போட்டியில் அஸ்வின் ரவிச்சந்திரன் சேர்க்கப்பட மாட்டார் எனக் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக, டெல்லியில் நடைபெறும் ஆப்கானிஸ்தான் மோதலில் அவருக்குப் பதிலாக இடம் பெற்ற ஷர்துல் தாக்கூர் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11: ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன்/ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.