மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நிது கங்காஸ்
காமன்வெல்த் விளையாட்டு குத்துச்சண்டை சாம்பியனான நிது கங்காஸ் (48 கிலோ) புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு தனது முதல் பதக்கத்தை உறுதி செய்தார். 22 வயதான ஹரியானா குத்துச்சண்டை வீராங்கனை நிது கங்காஸ் தனது காலிறுதிப் போட்டியில் ஜப்பானின் மடோகா வாடாவை எதிர்த்து வெற்றி பெற்றார். இதற்கிடையே, நிகத் ஜரீன் (50 கிலோ), சாக்ஷி சவுத்ரி (52 கிலோ), மனிஷா மவுன் (57 கிலோ), ஜெய்ஸ்மின் லம்போரியா (60 கிலோ), லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), சவீட்டி பூரா (81 கிலோ) மற்றும் நூபுர் ஷேர்கான் (+81 கிலோ) உட்பட மேலும் ஏழு இந்திய வீராங்கனைகள் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.