
ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம்
செய்தி முன்னோட்டம்
முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டு உள்ளார்.
நிதிஷ் ராணா 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். கொல்கத்தா அணிக்காக இதுவரை இதுவரை 74 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இதில் 1,744 ரன்களை குவித்துள்ளார். அவர் கேகேஆர் அணிக்காக 11 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 87 ஆகும்.
மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் நிதிஷ் ராணா கேப்டன்ஷியிலும் அனுபவம் கொண்டுள்ளார்.
இதன் மூலம் நிதிஷ் ராணா கவுதம் கம்பீருக்கு அடுத்தபடியாக கேகேஆரை வழிநடத்தும் இரண்டாவது டெல்லி வீரராகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ட்வீட்
Official statement. @NitishRana_27 #AmiKKR #KKR #Nitish #NitishRana pic.twitter.com/SeGP5tBoql
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023