காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா!
நீரஜ் சோப்ரா ஜூன் 4 ஆம் தேதி நெதர்லாந்தின் ஹெஞ்சலோவில் உள்ள ஃபேன்னி பிளாங்கர்ஸ்-கோயன் ஸ்டேடியனில் நடைபெறும் வருடாந்திர டிராக் அண்ட் ஃபீல்ட் நிகழ்வான FBK கேம்ஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் போட்டியில் பங்கேற்க முடியாது என்று நீரஜ் சோப்ரா மேலும் குறிப்பிட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சமீபத்தில், எனது பயிற்சியின் போது எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ஹென்ஜெலோவில் உள்ள FBK போட்டியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி!" என்று தெரிவித்துள்ளார். ஜூன் 13 அன்று ஃபின்லாந்தில் துர்குவில் நடைபெறும் பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டிக்கு முன் அவர் முழு உடற்தகுதி பெறும் முனைப்புடன் உள்ளார்.