33 ஆண்டுகளுக்கு பிறகு சீரி ஏ லீக் பட்டத்தை வென்ற நபோலி
உடினீஸ் கால்பந்து கிளப் அணிக்கு எதிரான போட்டியை 1-1 என டிரா செய்ததன் மூலம், சீரி ஏ லீக் 2022-23 தொடரை 33 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலியின் நபோலி கால்பந்து கிளப் அணி கைப்பற்றியுள்ளது. நபோலி அணி கடைசியாக அவர்கள் 1989-90 இல் சீரி ஏ லீக் பட்டத்தை வென்றது. அது நபோலியின் இரண்டாவது பட்டமாகும். டியாகோ மரடோனா மற்றும் ஜியான்பிரான்கோ ஜோலா போன்ற ஜாம்பவான்கள் அப்போது அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். அப்போது நேபோலி மேலாளராக ஆல்பர்டோ பிகோன் இருந்தார். ஏப்ரல் 29, 1990 இல் நபோலி பட்டத்தை வென்ற பிறகு, மூன்றாவது சீரி ஏ பட்டத்தை வெல்வதற்கு 33 ஆண்டுகள் காத்திருந்தது.
இரண்டு சீரி ஏ கோப்பைகளுக்கு இடையே அதிக இடைவெளி கொண்ட இரண்டாவது அணி நபோலி
சீரி ஏ லீக் பட்டத்தை ஒரு முறை வென்று இரண்டாவது முறைக்காக அதிக காலம் காத்திருந்த அணியாக ஏஎஸ் ரோமா உள்ளது. இது 1942 இல் தனது முதல் பட்டத்தை வென்ற பிறகு இரண்டாவது பட்டத்திற்கான 41 ஆண்டுகள் காத்திருந்து 1983 இல் பட்டம் வென்றது. ஏஎஸ் ரோமாவுக்கு பிறகு 33 ஆண்டுகள் இடைவெளியில் இரு பட்டங்களை வென்று நபோலி இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் நடப்பு சீரி ஏ தொடரில் ஐந்து ஆட்டங்கள் மீதமுள்ள நிலையிலேயே புள்ளிகள் அடிப்படையில் லீக் பட்டத்தை வென்று, இத்தாலியில் இதை செய்த மூன்றாவது அணியாக நாபோலி சாதனை படைத்துள்ளது. முன்னதாக இண்டர் மிலன் மற்றும் சீசனில் ஜுவென்டஸ் மட்டுமே இந்த சாதனையை எட்டியுள்ளன.