Loading...
சர்வதேச கிரிக்கெட்டில் நமீபியா சாதனை: அயர்லாந்தை வீழ்த்தி 3-2 என ஒருநாள் தொடர் வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது நமீபியா அணி.

சர்வதேச கிரிக்கெட்டில் நமீபியா சாதனை: அயர்லாந்தை வீழ்த்தி 3-2 என ஒருநாள் தொடர் வெற்றி

எழுதியவர் Vasuki
Nov 02, 2026
07:10 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முழு உறுப்பினர் அந்தஸ்து கொண்ட முன்னணி அணியான அயர்லாந்தை வீழ்த்தி, கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி ஆப்பிரிக்கக் கண்டத்தின் அசோசியேட் நாடான நமீபியா சாதனை படைத்துள்ளது. லோர்கன் டக்கர் தலைமையிலான அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் நமீபியா தட்டிச் சென்று உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தொடரின் போக்கு

நமீபியாவின் மிரட்டல் ஆதிக்கம்

தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதிலும், இரண்டாவது போட்டியில் கேப்டன் எராஸ்மஸின் அபார சதத்தின் உதவியோடு நமீபியா 321 ரன்கள் குவித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் பதிலடி கொடுத்தது.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் 316 ரன்கள் குவித்த நமீபியா, அயர்லாந்தை 253 ரன்களுக்குச் சுருட்டி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பின்னர் நான்காவது போட்டியில் அயர்லாந்து 130 ரன்கள் வித்தியாசத்தில் கம்பேக் கொடுத்து தொடரை 2-2 என சமன் செய்ததால், ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி இறுதிப் போராக மாறியது.

தொடர் நாயகன் விருது

தீர்மானிக்கும் ஆட்டத்தில் சுருண்ட அயர்லாந்து 

தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டியில் முதலில் பந்துவீசிய நமீபியா, அயர்லாந்து அணியை வெறும் 129 ரன்களுக்குள் சுருட்டி மிரட்டியது.

தொடர்ந்து எளிய இலக்கான 130 ரன்களை வெறும் 21.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து நமீபியா இமாலயத் தொடர் வெற்றியை உறுதி செய்தது.

இத்தொடரில் அபாரமாகச் செயல்பட்டு 263 ரன்கள் குவித்ததோடு, 4 முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்திய நமீபிய கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முழு உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்ற அயர்லாந்துக்கு எதிராக நமீபியா நிகழ்த்தியுள்ள இந்த வரலாற்று வெற்றி, அசோசியேட் நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT